நடிகர் தனுஷ் சினிமா உலகில் பல்வேறு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றியை கண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். இருப்பினும் இவரது ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தழுவுகின்றன அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் வெற்றியை ருசிக்காததால் தற்போது தனுஷ் சற்று அப்செட்டில் இருக்கிறார்.
இருப்பினும் அதை மாற்றி அமைக்க நடிகர் தனுஷ் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தனுஷ் கையில் தற்பொழுது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் இருக்கின்றன இந்த படங்கள் ஒவ்வொன்றும் ரிலீசாக இருப்பதால் விட்ட இடத்தை பிடிப்பார் என தெரிய வருகிறது.
சினிமா உலகில் தன்னை நம்பி வருகின்ற பெரும்பாலான படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒரு சில நல்ல கதைகள் இருந்தும் அதில் நடிக்காமல் விட்டு உள்ளார் தனுஷ். அந்த வகையில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஜித்தன் இந்த படத்தின் கதை சற்று வித்தியாசமாக இருந்தது.
மக்கள் மற்றும் ரசிகர்களுக்கும் ரொம்ப பிடித்து போய் இருந்தது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமாகி இருப்பார் ஆனால் உண்மையில் வின்சென்ட் செல்வா இந்த படத்தின் கதையை தனுஷிடம் தான் சொல்லி உள்ளார் சில காரணங்களால் அவர் இந்த படத்தை கைவிடவே பின் ஜித்தன் ரமேஷ் நடித்தாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷ் நடித்திருந்தால் நிச்சயம் பெரிய அளவு ஹிட் அடித்திருக்கும் அதில் இவரது நடிப்பும் பெரிய அளவில் இருந்திருக்கும். இந்த வாய்ப்பை தனுஷ் அப்பொழுது தவற விட்டார். இப்பொழுதும் கூட தனுஷ் ரசிகர்கள் இதை நினைத்து ரொம்ப வருத்தப்படுகின்றனர்