நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தற்பொழுது 43-வது திரைப்படமாக மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை துருவங்கள் பதினாறு மாபியா நரகாசூரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் தான் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அதேபோல் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் இவர் தமிழில் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது அதுமட்டுமில்லாமல் சுமுர்த்தி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் மாறன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
மாறன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படியிருக்கும் நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாறான் திரைப்படத்தின் பொல்லாத உலகம் என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
மேலும் நடிகர் தனுஷ் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ளார்கள். இந்த வீடியோ பாடல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவில் நடிகர் தனுஷ் தன்னுடைய நடனத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
இதோ வீடியோ பாடல்.