Dhanush Maari 2 : நடிகர் தனுஷ் சாய்பல்லவி வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மாரி 2 இதன் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அதேபோல் இந்த இரண்டாவது பாகத்தை இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கியிருந்தார்.
மேலும் இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகியது படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2018 இல் வெளியாகிய இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் அப்பொழுதே ரசிகர்களிடம் மிகப்பெரிய ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது. அது மட்டுமில்லாமல் நாடு கடந்து இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் ரீல் செய்து வீடியோவை வெளியிட்டார்கள் ரவுடி பேபி பாடலை தனுஷ் தான் எழுதி இருந்தார்.
அதேபோல் ரவுடி பேபி பாடலை தனுஷ் மற்றும் பாடகி தீ ஆகியோர் இணைந்து பாடி இருந்தார்கள் இந்த பாடலின் நடன இயக்குனர் பிரபுதேவா தான். பிரபுதேவா நடனம் என்றாலே ரசிகர்களுக்கு வெகுவாக பிடிக்கும் அந்த வகையில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து ஒரு ஸ்டேப் போட்டார்கள் அந்த ஸ்டேப் தான் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரட் ஸ்டெப்பாக இருக்கிறது .
இந்த நிலையில் ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் அப்பொழுது மிகப்பெரிய சாதனை படைத்தது தற்பொழுது காலம் கடந்து ரவுடி பேபி பாடல் 150 கோடி பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது 150 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை ரவுடி பேபி பாடல் படத்துள்ளது.