தமிழ் சினிமாவில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு திரைப்படங்களை கொடுத்து சிறப்பாக பயணித்துக் கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். சமிப காலமாக அவர் கொடுக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அதேசமயம் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும் படியாக உள்ளதால் அந்த படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன.
அப்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அசுரன், கர்ணன் போன்ற படங்களை தொடர்ந்து ஜகமே தந்திரம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை அடைந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு அவர் gray man, நானே வருவேன், D43 போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
இப்படி இருக்க சமிப காலமாக தனுஷ் பற்றிய பேச்சு சமூக வலைதள பக்கங்களில் உலா வந்த நிலையில் தற்போது முக்கிய பிரபலங்கள் தங்கியிருக்கும் சென்னை போயஸ்கார்டனில் நடிகர் தனுஷ் சொந்தமாக ஒரு பெரிய இடம் ஒன்றை வாங்கி உள்ளார்.
மேலும் அந்த தனுஷ் புதிய வீட்டின் கட்டிட பணிகளை தொடங்குவதற்காக நடத்தப்பட்ட பூஜையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின இந்த நிலையில் தனுஷ் அந்த வீட்டை 150 கோடியில் கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் உடற்பயிற்சி கூடம் நீச்சல் குளம் உட்புற விளையாட்டு வசதிகளுடன்கூடிய ஹோம் தியேட்டர்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கின்றனர். தனுஷின் இந்த வீடு வேற ஒரு லுக்கில் இருப்பதோடு, மிக பிரம்மாண்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.