தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் சிறந்த படைப்புகளை சமீபகாலமாக கொடுத்து வருவதால் டாப் நடிகரான அஜித்-விஜய் ஆகியவர்களின் இடத்திற்கு பிறகு நடிகர் தனுஷின் பெயரே ஒலித்துக்கொண்டிருக்கிறது அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ஜொலிக்கிறார்.
தற்பொழுது இவர் தனது 43வது திரைப்படத்தில் நடிக்கிறார் அதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதில் ஒரு படமாக அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து நானே வருவேன் என்ற திரைப் படத்திலும் நடிக்க உள்ளார்.
தனுஷ், செல்வராகவன் இருவரும் இணையும் படங்கள் ஒவ்வொன்றும் மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளதால் “நானே வருவேன் படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தில் இருக்கிறது.
நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜாவை கமீட் செய்ய அதிக அளவில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது அண்ணன் மகனை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இதோ நடிகர் தனுஷ் அண்ணன் செல்வராகவன் பையனுடன் இருக்கும் க்யூட் புகைப்படம்.