சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிமிர்த்தும் தனுஷ் – அடுத்தடுத்து வெளிவர இருக்கும் புதிய திரைப்படங்கள்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.

dhanush
dhanush

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் சுமாரான வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்த ஹிட் படத்தை கொடுக்க சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்த வருகிறார் அந்த வகையில் தற்போது தனுஷ் கையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாந்தி போன்ற பல படங்கள் இருக்கின்றன.

மேலும் தனுஷ் தமிழை தாண்டி ஹாலிவுட் பக்கமும் படங்களில் நடித்த வருகிறார். ஹாலிவுட்டில் இவர் நடித்து வந்த “The gray man” திரைப்படம் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து தனுஷ் தமிழில் நடித்து வந்த திருச்சிற்றம்பலம் படமும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளிவர உள்ளது.

இப்படி தனுஷின் அடுத்தடுத்த இரு படங்கள் உடனடியாக வெளி வருகின்ற நிலையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமும் இந்த ஆண்டே வெளியாகும் என கூறப்படுகிறது. ஆம் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த நானே வருவேன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை தானு தயாரித்து வருகின்ற நிலையில் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்து வருகிறார் மேலும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து செல்வராகவன், யோகி பாபு, இந்துஜா, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே தேதியில் தான் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.