dhanush latest update: இயக்குனர் செல்வராகவனால் செதுக்கப்பட்டு வெற்றிமாறனால் சிற்பமாணவர் தான் நடிகர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் சொதப்பலான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் இவரை மிஞ்ச யாருமே கிடையாது.
இந்நிலையில் மாஸ்ஸான ரோலில் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் தனுஷ் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்தவகையில் இவர் தேர்வு செய்த நடித்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் ஹிட் கொடுத்து வருகிறது.
இவ்வாறு இவர் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தன்னுடைய பழைய இயக்குனர்கள் அனைவரையுமே கழட்டி விட்டது தான். அதுமட்டுமில்லாமல் இதுவரை தன்னை வைத்து படம் இயக்கிய எந்த இயக்குனர்களின் திரைப்படங்களிலும் இனி அவர் நடிக்கப் போவதில்லை என தனுஷ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புதிய புதிய இயக்குனர்களுக்கும் புதிய கதைகளுக்கும் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப் போவதாக தெரிய வருகிறது. இவ்வாறு செய்தால் மட்டுமே சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என யோசித்து நடிகர் தனுஷ் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாராம்.
அதிலும் குறிப்பிட்ட இரண்டு இயக்குனர்களை மட்டும் தனுஷ் விட போவதில்லையாம் அதில் முன்னிலை வகிப்பது வெற்றிமாறனும் மாரிசெல்வராஜ் ஆகியவர்கள் ஆகும் ஏனெனில் தனுஷ் இன்று முன்னணி நடிகராக வலம் வருவதற்கு வெற்றிமாறனும் மாரிசெல்வராஜ் தான் காரணம்.
அந்த வகையில் வெற்றிமாறன் ஒரு திரைப்படத்தை இயக்க போகிறார் என்றாலே அந்த திரைப்படம் வெற்றி என முடிவு செய்துவிடுகிறார்கள் இப்படி ஒரு இயக்குனர் தனுஷை வைத்து திரைப்படம் இயக்க முன்வந்தால் தனுஷ் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்.