தளபதி விஜய்க்காக எழுத்தப்பட்ட கதையை தட்டி தூக்கிய தனுஷ்.! எந்த படம் தெரியுமா.?

dhanush-and-vijay
dhanush-and-vijay

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து அசத்தியவர் கே. வி. ஆனந்த். இவர் சினிமா உலகில் தற்போது இல்லாதது பெரும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. கே. வி. ஆனந்த்.

தமிழ் சினிமாவில் இவர் இயக்குனராக மட்டும் பணி புரியாமல் போட்டோகிராபராகவு ம், ஒளிப்பதிவாளராகவும் தமிழ் சினிமாவில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே. வி. ஆனந்த் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்துமே மெகா ஹிட் தான் அந்த வகையில் கோ, அயன், மாற்றான், அனேகன், கவண், காப்பான் ஆகிய அனைத்து படங்களும் மக்களுக்கு பிடித்தன.

மேலும் அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்த இவர் கடைசியாக அனேகன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்த திரைப்படத்தில் தனுஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி மக்களுக்கு விருந்து படைத்து இருந்தார்.அந்த திரைப்படம் நடிகர் தனுஷ் கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது ஆனால் இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் விஜய் தான்.

ஆனால் அவர் இந்த படத்தின் கதையை எல்லாம் கேட்டுவிட்டு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மற்ற படங்களில் பிசியாக விஜய் ஓடிக்கொண்டு இருந்ததால் அப்போதைய கால கட்டத்தில் அனேகன் படத்தை அவர் தவற விட்டு உள்ளார் அவருக்கு பிறகு தான் நடிகர் தனுஷ்க்கு இந்த படம் கை மாறியதாக தெரியவருகிறது.