தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.
அதோடு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று அனைவருக்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்களது பாராட்டுகளை கூறிவருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் தற்பொழுது ஹாலிவுட் திரைப்படமான த கிரீன் மேன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
தற்பொழுது கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து இவரின் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட் பிலிம்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. கர்ணன் திரைப்படத்திற்குப் பிறகு தனுஷின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. அந்த வகையில் வரிசையாக ஏராளமான படங்களில் கமிட்டாகி உள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது த கிரேன் மேன்,அற்றங்கிரே, முண்டாசுபட்டி, ராம்குமார் இயக்க உள்ள ஒரு திரைப்படத்திலும், செல்வராகவனுடன் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற திரைப் படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சாணி காகிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தனுஷுடன் இணையவுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது பாலாஜி மோகன் தனுஷை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இதற்கு முன்பே பாலாஜி மோகன் தனுஷை வைத்து மாரி, மாரி -2 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் தனது புதிய படம் ஒன்றில் தனுஷை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் உப்பண்ணா. இத்திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவரின் அழகினாலும், நடிப்பு திறமையினாலும் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார்.
இந்நிலையில் பாலாஜி மோகன் இயக்கவுள்ள புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிப்பார் என்று கூறப்படுகிறது. கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.