தளபதி தயாரிப்பாளரை தட்டி தூக்கிய தனுஷ்.! வாரிசு இன்னும் வெளி வரல அதுக்குள்ள அடுத்த படமா..

dhanush
dhanush

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகராக அறிமுகமாகி பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவராக விளங்குகிறார். மேலும் இவருடைய நடிப்பில் வெளிவந்த கர்ணன், அசுரன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அடுத்ததாக தனுஷ் விஜய் பட தயாரிப்பாளருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்பொழுது நடிகர் விஜய் தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிக்க இருக்கும் தெலுங்கு திரைப்படத்தினை தெலுங்கு முன்னணி இயக்குனர் கிஷோர் ரெட்டி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தினை தில்ராஜ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அடுத்ததாக தில்ராஜ் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக் குழுவினர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.