Rashmika mandanna : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் முதலில் “கிரிக் பார்ட்டி” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கீதகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
அதன் பிறகு பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான “சுல்தான்” திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு பெருமளவு காட்சிகள் இல்லை மேலும் இந்த படம் சுமாராக ஓடியது. இதனை தொடர்ந்து நல்ல கதைக்காக காத்திருந்த ராஷ்மிகா வந்தனாவுக்கு விஜயின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.
இந்த படம் வெளிவந்து 300 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி பெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. தமிழில் டாப் ஹீரோ ஒருவருடன் இணைந்து உள்ளார். அதை அவரே உறுதியாக கூறியுள்ளார். அது வேறு யாருடனும் அல்ல தனுஷ் தான் கைகோர்க்க இருக்கிறார். தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் அதன் பிறகு தனது ஐம்பதாவது படத்தின் நடிக்க இருக்கிறார் இதை எல்லாம் முடித்துவிட்டு தனுஷ் 51 படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இந்த படத்தில் தான் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவு சேகர் கம்முல்லா இயக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது இதை உறுதிப்படுத்தும் வகையில் ராஷ்மிகா மந்தனா தனது twitter பக்கத்தில் ஒரு பதிவை போட்டு வெளியிட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள்.
Beginning of a new journey.💃🏻❤️#D51
A @sekharkammula film 🎥@dhanushkraja @AsianSuniel @puskurrammohan #AmigosCreations @SVCLLP pic.twitter.com/dQFghtqd6R
— Rashmika Mandanna (@iamRashmika) August 14, 2023