Anikha : திரை உலகில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தான் நடிகைகள் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுவார்கள் ஆனால் நடிகை அனிகாவின் ஸ்டைல் வேற.. பட வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தக்க வைத்திருக்கிறார்.
இவர் முதலில் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்தவர். குறிப்பாக தமிழில் இவர் நடித்த என்னை அறிந்தால், நான் ரவுடி தான், மிருதன், விசுவாசம் போன்ற அனைத்து படங்களுமே பெரிய வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா..
பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடிக்க ஆரம்பித்துள்ளார் அப்படி கடைசியாக இவர் நடித்த ஓ மை டார்லிங் படம் சுமாரான வரவேற்பு பெற்றது இந்த படத்தில் கிஸ் சீன்கள் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து அனிகா தன்னை நம்பி வருகின்ற படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அனிகாவுக்கு மிகப்பெரிய ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வரும் தனுசுடன் இணைந்து படம் பண்ண இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தின் நடிக்க உள்ளார் அந்த படத்தில் தான் அனிகா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது அனிகா தொடர்ந்து கிளாமர் காட்டி வருவதால்.. தனுஷ் நடிக்கும் படத்தில் அனிகாவுக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..