தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அனைத்து படங்களும் ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது. அந்தவகையில் ஒரு படம் தான் கர்ணன் இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இப்படம் பல நாட்களாகவே எப்பொழுது ரிலீசாகும் என்று கூறப்படாததால் ரசிகர்கள் சற்று சோர்ந்து உள்ளார்கள்.
அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தின் பாடல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன்மூலம் இப்படமும் வசூல் ரீதியாக பெரும் வேட்டையை அடையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் சில தினங்களுக்கு முன்பு மார்ச் 23 அன்று கர்ணன் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது கர்ணன் திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
அந்த டீசரில் கூர்மையான கத்தி உடன் குதிரைமேல் வேட்டையாடுகிறார் தனுஷ்.இந்த டீசரே இப்படி மிரட்டலாக இருந்தால் திரைப்படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த டீசரை பார்த்து மிரண்டு போன பல திரைப்பிரபலங்கள் தனுஷுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதோ கர்ணன் திரைப்படத்தின் டீசர்.