மீண்டும் அவார்ட் வாங்க போகும் தனுஷ் திரைப்படம்.! இந்த முறை வேற லெவல்.

dhanush
dhanush

தமிழ் சினிமாவின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்த வருபவர்  நடிகர் தனுஷ்.இவர் நடிப்பில் சமீப காலங்களாக வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

அந்தவகையில் கர்ணன் திரைப்படமும் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் தற்போது நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த திரைப்படமும் தனுசுக்கு மேலும் ஒரு தேசிய விருதை வாங்கித் தரும் அந்த அளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பை வெளிக் காட்டி இருந்தார்.

இத்திரைப்படத்தை தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்க எஸ் கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.அந்தவகையில் தனுஷ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இவர்களின்  கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்தது.மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளார்கள் எனவே அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போழுது ஏரி உள்ளது.

இந்நிலையில் கர்ணன் திரைப்படத்தின் கதையை அப்படியே ரீமேக் செய்து தெலுங்கில் படத்தை எடுக்க தெலுங்கு சினிமா இயக்குனர் ரெடியாக இருக்கிறாராம். இந்தத் திரைப்படத்திற்காக தெலுங்கு நடிகர் சீனிவாஸ் சாய் என்பவர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான இவர் இந்த திரைப்படமும் நடித்தால் நிச்சயம் அவரும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்வதோடு தெலுங்கில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி விடலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கில் இத்திரைப்படத்தை பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்க உள்ளார். தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.