ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பாட்ட பரம்பரை திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தற்பொழுது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் அந்த நடிகருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் திரில்லர்” என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து உருவாகவுள்ளது. மேலும் திரைப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்த படம் 1980களில் நடக்கும் கேங்ஸ்டர் கதை என்றும் இந்த தலைப்பான மில்லர் படத்தில் தனுஷின் கதாபாத்திரத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மூன்று கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வத்தைத் தூண்டி உள்ளது.
மேலும் இப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனராம். இந்தப் படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்கள் இப்படத்திற்கு ஒரு பெரிய பட்ஜெட்டை வைத்துள்ளனர்.
அந்த வகையில் தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே கேப்டன் மில்லர் திரைப்படம் அதிக பொருட்செலவு படமாக அமையும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலை தற்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் நண்பனாக நடித்த நடிகர் சரவணவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.