தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது வருடத்திற்கு ஒரு படத்தைக் நல்ல முறையில் கொடுத்து வருகின்றனர் ஆனால் நடிகர் தனுஷோ இதிலிருந்து மாறுபட்டு குறைந்த சம்பளம் வாங்குவதோடு ஒரு வருடத்திற்கு மூன்று, நான்கு ஹிட் படங்களை கொடுத்து சிறப்பாக ஜொலிக்கிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் Atrangi re, the gray man போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன மேலும் இவரது நடிப்பில் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களின் படப்பிடிப்பு தற்போது எடுக்கப்பட்டு வருகின்றனர.
இதனால் நடிகர் தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதன்பிறகு தனுஷ் தனது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் உடன் மீண்டும் ஒரு முறை இணைந்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதன்பின் தெலுங்கிலும் ஒரு படம் செய்ய இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியது.
இந்த நிலையில் திடீரென இயக்குனர் சுந்தர் சியுடன் கை கோர்த்து ஒரு புதிய படம் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இருப்பினும் இச்செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சமிப காலமாக நடிகர் தனுஷ் இளம் இயக்குனர்களுக்கு தான் பெரிதும் வாய்ப்பு கொடுத்து தான் வந்துள்ளார் இப்படி இருக்க இயக்குனர் சுந்தர் சி யுடன் இணைகிறாரா என்பது கேள்வி குறிதான் என்கின்றனர் ரசிகர்கள்.