சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தொடர் வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். ஆனால் சமீபகாலமாக கதை களத்தை சரியாக தேர்தெடுத்து நடிக்காமல் போவதால் இவரது திரைப்படங்கள் தோல்வியை தழுவுகின்றன. அந்த வகையில் அண்மையில் வெளிவந்த தனுஷின் மாறன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லை..
என்றாலும் OTT தளத்தில் வெளியாகி மக்களை பெருமளவில் கவரவில்லை. இதனை தொடர்ந்து வெற்றியை கொடுக்க வேறு வழி இல்லாமல் தனது அண்ணன் செல்வராகவனுடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் அந்த படத்தை “நானே வருவேன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் இருந்து போஸ்டர் வெளியாகி நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ஹீரோயின்னாக இந்துஜா ரவிசந்திரன் நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு இன்னொரு நடிகையும் களமிறங்கியுள்ளார் ஆம் தென்னிந்திய சினிமா உலகில் இருக்கின்ற நடிகைகளுடன் தனுஷ் நடித்துள்ள நிலையில் புதிய நடிகையை களமிறங்கியுள்ளார்.
வெளிநாட்டு நடிகையை களமிறங்கி உள்ளது நானே வருவேன் படக்குழு. தற்போது சுவீடன் நாட்டைச் சேர்ந்த “எல்லி அவுர்” என்ற நடிகைதான் தற்பொழுது தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் இந்த படத்தில் நடிப்பும், கிளாமரும் அதிகமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.