லோக்கல் ரவுடியாக களமிறங்கிய தனுஷ்!! அதிரடியாக வெளிவந்த ஜகமே தந்திரம் டீசர்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடி ரிலீசாக உள்ளது.

இப்படத்தை ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ஜகமே தந்திரம் திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.

இப்படம் தியேட்டரில் ரிலீஸ்சாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து வந்தார்கள்.  ஆனால் கிட்டத்தட்ட தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என்று 6 மாத காலங்களாக படப்பிடிப்புகளை முடித்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் தனுஷ் மிகவும் அசத்தலான கேரக்டரில் நடித்துள்ளதால் திரைப்படத்திற்காக அதிக எதிர்பார்த்து உள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இருவர் கூட்டணியிலும் உருவாகும் முதல் திரைப்படமாகும்.

எனவே இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் கோலாகலமாக  கொண்டாடலாம் என்று ரசிகர்கள் ஆவளுடன்எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஆனால் திடீரென்று எதிர்பாராத விதமாக தயாரிப்பாளர் ஒய்நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் நேரடியாக ஜகமே தந்திரம் படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு கொடுத்துவிட்டார்.

இது தனுஷ் முதல் பலருக்கு அதிர்ச்சி தரும் ஒன்றாக அமைந்துள்ளது. இருந்தாலும் சிலர் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தற்போது டீசரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது அந்த டீசர்.