dhanush jagamey thanthiram movie reach viral: தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து தனது அயராத உழைப்பினால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் தனுஷ்.
இவரது நடிப்பில் சென்ற வருடம் அசுரன் என்ற திரைப்படம் திரையரக்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த படத்தில் தனுஷின் நடிப்பு வேற லெவல் என்று பல சினிமா பிரபலங்கள் தனுஷைபாராட்டினார்கள்.
இந்நிலையில் தனுஷ் அடுத்அடுத்ததாக திரைப்படங்கள் நடித்து வருகிறார் அதில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படமும் கர்ணன் என்ற திரைப்படமும் படம் முடிய போற நிலையில் இருந்து வருகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இயக்கி சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதிலும் குறிப்பாக அனிருத் பாடிய புஜ்ஜி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் தற்போது வரை 6 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளது.
இந்த தகவல் தனுஷின் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.
6⃣ MILLION for #Bujji! 🥰🕺
➡️https://t.co/qtSlbxxBmy@dhanushkraja @karthiksubbaraj @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @anirudhofficial @Lyricist_Vivek #JagameThandhiram #JTTamil pic.twitter.com/VNeUklLKxa
— Sony Music South (@SonyMusicSouth) November 26, 2020