நடிகர் தனுஷ் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஹாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழில் முதன்முதலாக துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை செல்வராகவன் தான் இயக்கியிருந்தார் என் திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் தனுஷ் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தனுஷ் மாபெரும் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என தனுஷின் புகழ் ஓங்கி ஒலிக்கிறது. இந்த நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்த தகவல் சினிமா உலகினரை உலுக்கியது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தனுஷ் தன்னுடைய மகன் தான் என மதுரையை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதுமட்டுமில்லாமல் ஊடகங்களுக்கு தனுஷ் தன்னுடைய மகன் தான் என ஒரு சில ஆதாரங்களை காட்டி பேட்டியையும் கொடுத்தார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ஏற்கனவே விசாரித்து ரத்து செய்துவிட்ட நிலையில் தனுஷ் தங்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நீதிமன்ற உத்தரவை பெற்று விட்டதாகவும் கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் தனுஷ் மற்றும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவிற்கு நோட்டீசை விடுத்தார்கள்.
இந்த தகவல் தனுஷ் காதுக்கு செல்ல தனுஷ் உடனே மிகவும் கோபப்பட்டு உள்ளார் அதுமட்டுமில்லாமல் கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் மான நஷ்ட ஈடு கேட்டு 10 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என தனுஷ் மற்றும் கஸ்தூரிராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.