நடிகர் அஜித்திற்கு வில்லனாகும் தனுஷ்.! தரமான ‘ஏகே 62’ திரைப்படத்தின் அப்டேட் இதோ..

AK-62
AK-62

நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் தன்னுடைய 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தற்பொழுது அந்த படத்தில் நடிகர் தனுஷ் வில்லனாக நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்பொழுது துணிவு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசாக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கம் இருக்கும் புதிய திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது எனவே இந்த படத்திற்கு தற்காலிகமாக ஏகே 62 என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்பொழுது அஜித் துணிவு திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த திரைப்படம் வெளியான பிறகு ஏகே 62 திரைப்படத்தின் சூட்டிங் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது யார் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என நடிகர், நடிகைகளின் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்க வைக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது இவ்வாறு இந்த பேச்சுவார்த்தையில் நடிகர் தனுஷ் ஓகே சொல்லிவிட்டார் அஜித்துக்கு வில்லனாக முதன்முறையாக நடிகர் தனுஷ் நடிப்பார். இது ஒரு புறம் இருக்க மேலும் இந்த படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒரு கேமியோ ரோட்டில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் பெற்ற வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுசுவுடன் இணைந்து விக்னேஷ் சிவன் நடித்திருந்த நிலையில் அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தினை தயாரித்தது தனுஷ் தான். இவ்வாறு விக்னேஷ் சிவன் மற்றும் தனுஷுக்கு இடையே நல்ல நட்பு இருந்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.