“பவர் பாண்டி” படத்தில் நான் கமிட்டாக காரணம் தனுஷ் தான் – அவர் சொன்ன வார்த்தைகள்.! என்னை நடிக்க வைத்தது டிடி ஓபன் டாக்.

dhanush-and-DD
dhanush-and-DD

டிடி என்கின்ற திவ்யதர்ஷினி சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.தனது அழகான பேச்சின் மூலம் கோடானகோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வைத்துள்ள திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மட்டும் பயணிக்காமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இருப்பினும் அவருக்கு பெரிதும் பிடித்த தொகுப்பாளர்  என்பதால் விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் இவர் விருது விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, நடிகர் நடிகைகளின் புதிய படங்கள் புரமோஷன் செய்வது மற்றும்  காபி வித் டிடி,ஜோடி நம்பர் 1 போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

சின்னத்திரையில் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் வெள்ளித்திரையில் மாதவன் நடிப்பில் வெளியான நளதமயந்தி படத்தில் மாதவனுக்கு தங்கையாக நடித்து இருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது.

என்பது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார் எனக்கு போன் செய்து தான் இயக்கும் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என கேட்டார். நானும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டேன். தனுஷ் என்னிடம் இந்த படத்தில் லேடிஸ்க்கு ஒரு மெசேஜ் சொல்லணும் அது மக்களுக்கு மிகவும் வும் பரிட்சைரியமான முகம் என்றால் நன்றாக இருக்கும் அதனால் தான் உங்களை தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார்.

அவர் சொன்ன வார்த்தைகள் தான் அந்த திரைப்படத்தில் ஒரே ஒரு சிறிய காட்சியில் நடித்தேன் என தெரிவித்தார். இப்பொழுதும் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே வருகின்றன இவர் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா  போன்ற படங்களில் துணிச்சலாக நடித்து வருகிறார்.