Actor Dhanush: நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் ரியல் பான் இந்திய ஸ்டாராக வளர்ந்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது தனுஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் இவர்தான் ரியல் பான் இந்திய ஸ்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தனுஷ் நடிப்பில் சமீப காலங்களாக வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி தற்பொழுது தனுஷின் 48வது படமாக கேப்டன் மில்லர் படம் தமிழில் உருவாகி வரும் நிலையில் இது தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து கேப்டன் மில்லர் படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளியாகி மிகப்பெரிய ரீச்சினை பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தனுஷ் நடிக்க இருக்கும் ஐந்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தனுஷின் 49வது படத்தின் நெல்சன் இயக்க இருப்பதாகவும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இதற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதனைத் தொடர்ந்து தனுஷின் 50வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் படத்தில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தினை தனுஷ் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து தனுஷின் 51வது படத்தை தெலுங்கு பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தனுஷின் 52வது படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு TERE ISHK MEIN என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனுஷ் தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் 5 படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் இவர் தான் ரியல் பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்பதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது.