தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அது அசுரன் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்தது மட்டும் இல்லாமல் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் அவர்கள் நடித்திருந்தார்.
இவர் இந்த திரைப்படத்தின் மூலம் நமது நடிகை ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தது மட்டுமில்லாமல் பல்வேறு ரசிகர் பெருமக்களும் உருவாகியுள்ளார்கள் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் 61 திரைப்படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவாகியுள்ளது.
அந்த வகையில் இவரி இடம் பெற்ற காட்சிகள் தற்பொழுது படப்பிடிப்பில் இருப்பதாகவும் அவை விறுவிறுப்பாக நடத்தப்பட்ட வருவதாகவும் சமூக வலைதள பக்கத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நேர்மைக்காக சரியான முறையில் வரி செலுத்தி வரும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகை மஞ்சு வாரியர் அவர்களுக்கு மத்திய அரசானது 2001 முதல் 2002 ஆம் ஆண்டு வரை வரியை சீரும் சிறப்புமாக சரியான முறையில் கட்டி வந்தது காரணமாக அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திரையுலகில் பல்வேறு தரப்பினர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை மஞ்சு வாரியர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகை என்பதன் காரணமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி முன்னணி நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நமது நடிகை சமீபத்தில் மோகன்லால் நடித்த திருஷ்யம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி மிகப்பெரும் அளவு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.