திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வசூலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி ஜொலிக்கும் தனுஷை ஆரம்பத்தில் வளர்த்து விட்டது அவரது குடும்பம் தான்..
அவரது அப்பா பல படங்களை தயாரித்து நஷ்டமாகி இருந்தார் கடைசியாக வறுமையில் இருந்த போதும் கூட துள்ளுவது இளமை படத்தை எடுத்தார் இந்த படம் வெற்றி பெற்ற பிறகு தனுஷுக்கும் சரி, அவரது அப்பா கஸ்தூரிராஜாவுக்கும் நல்ல காலம் அமைந்தது என்று சொல்லலாம்.. நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தனது அண்ணனுடன் கைகோர்த்து வெற்றி படங்களை கொடுத்தார்.
இன்று திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக உருவாகி இருக்கிறார். நடிப்பதையும் தாண்டி படங்களை தயாரிப்பது, பாடுவது என அனைத்திலும் வெற்றி கண்டு வருவதால் தனுஷுக்கு நாலா பக்கமும் காசு குவிகிறது. அண்மையில் கூட போயஸ் கார்டனில் 150 கோடி மதிப்பில் ஒரு பிரம்மாண்ட வீட்டை கட்டி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது தி.நகரில் கஸ்தூரி ராஜாவின் அலுவலகம் இருந்தது அங்கு பத்திரிகையாளர்கள் செல்வார்கள் அப்பொழுது டவுசர் போட்டுக்கொண்டு சின்னப் பையனாக தனுஷ் இருந்தார்.
ஒரு மூத்த பத்திரிகையாளர் வெங்கட் பிரபு அதுதான் தனுஷின் நிஜப் பெயரை வைத்து கூப்பிட்டு போய் காபி வாங்கிட்டு வா எனக் கூறுவாராம் தனுஷும் பொய் வாங்கிக் கொண்டு வருவாராம்.. அந்த பையன் தற்பொழுது தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டார் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.