பொதுவாக சினிமாவில் உள்ள பல நடிகைகள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள் என்று அவர்கள் செட்டில் ஆகும் அளவிற்கு பணக்காரர்களாக பார்த்து திருமணம் செய்து கொள்வார்கள்.
எடுத்துக்காட்டாக ஸ்ரேயா உட்பட இன்னும் பல நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தலைகாட்டாமல் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் இளம் நடிகை ஒருவர் அரசியல்வாதி மகனை திருமணம் செய்ய உள்ளதாகவும் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு நடிகர் சுந்தீப் கிஷன் நடிப்பில் வெளிவந்த நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மெகரின் பிரிஸ்டா. இவர் இத்திரைப்படத்தை தொடர்ந்து நோட்டா மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு போன்ற திரைப்படங்களில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தி மற்றும் பஞ்சாப் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து திரையுலகில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் எஃப் 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு திருமணமாக போகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென்று இவர்களின் நிச்சயதார்த்தம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்று உள்ளது. அந்தவகையில் இவர் திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளை ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லால் அவர்களின் பெயரன் பாவ்யா பிஷ்னோய் ஆவார்.
இந்நிலையில் அவர்கள் நிச்சயதார்த்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எனவே அவர்களுக்கு பல திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.