சினிமாவுலகில் நடிப்பு ஒருவரை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லும் அதற்கு உதாரணம் நடிகர் தனுஷை சொல்லலாம் ஏனென்றால் ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டினார்கள் காரணம் ஒல்லியாக இருக்கிறார் இவரது முகத்தை எல்லாம் மக்கள் பார்க்க யார் வருவார்கள் என கேலி செய்த காலம் உண்டு.
ஆனால் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வெற்றி மேல் வெற்றியை கண்டு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக மாறி உள்ளவர் தான் தனுஷ். இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இந்திய அளவில் பிரபலமடைந்து.
மேலும் அந்த திரைப்படத்திற்காக நடிகர் தனுஷின் தேசிய விருதுகளையும் வாங்கி அசத்துகிறார். அப்படி அண்மையில் இவர் வெளியான கர்ணன், அசுரன் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன் போன்ற ஒரு சில திரைப்படங்களில் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாரான வெற்றியை பெற்றது.
இருப்பினும் சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பான கதைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தெலுங்கில் ஒரு படம் பண்ண இருக்கிறார் அந்த திரைப்படத்திற்கு வாத்தி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகர் மாரிமுத்து தனுஷின் நடிப்பு குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது.
பொல்லாதவன் படத்தில் தனுஷும், கிஷோரும் இடையே நடக்கும் காட்சிகளில் தனுஷ் நடிப்பை பார்த்து அப்படியே சிலிர்த்து விட்டது அந்த காட்சியில் நடிக்கும்போது தனுஷுக்கு கண்கள் முழுவதும் ரெட்டாக மாறிவிட்டது ஒரே ஷாட்டில் அந்த காட்சியை தனுஷ் முடித்தார்.
பார்த்து அப்படியே பிரமித்துப் போனேன் கர்ணன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் தான் தனஷின் அடுத்த படமான அட்ராங்கி ரே படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் என கூறினார் மாரிமுத்து.