விஜய்யை ஓரங்கட்டி விட்டு முன்னேறி செல்லும் தனுஷ்.! அட இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை

vijay-dhanush
vijay-dhanush

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் இவர் தற்போது இந்திய சினிமா நடிகர்களில் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் அந்த அளவிற்கு இவரது ரசிகர்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலத்திலும் இவருடைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கிய வாரிசு திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இனைய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் விஜய் பின்னுக்கு தள்ளி தற்போது முதல் இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவரும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்து வருகிறார். விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட  நடிகர் என்று பெயர் எடுத்தவர் நடிகர் தனுஷ்.

இவர் நடிப்பில் வெளியான நானே வருவேன் திரைப்படம் வசூலில் சொதப்பியதால் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் பின்னுக்கு தள்ளி தனுஷ் முன்னிலையில் உள்ளார் என்ற ஒரு தகவல் வெளியாகி வருகிறது அதாவது ஆண்டுதோறும் கூகுளில் அதிகம் பார்க்கப்படும் நடிகர் மற்றும் நடிகைகளின் பட்டியல் வெளியிடுவார்கள் அந்த வரிசையில் தற்போது அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் வரிசையில் முதல் இடத்தில் தனுஷும் இரண்டாவது இடத்தில் விஜயும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் நடிகர் விஜய் தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் முதல் இடத்தில் இருந்தார் ஆனால் இந்த வருடம் நடிகர் தனுஷ் அந்த இடத்தை பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.