ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்-மாரி செல்வராஜ்.! விவரம் இதோ

dhanush 1
dhanush 1

நடிகர் தனுஷ் மீண்டும் பிரபல முன்னணி இயக்குனருடன் கைகோர்த்து இருக்கும் நிலையில் அந்த திரைப்படம் குறித்த போஸ்டர் சற்று முன்பு வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தனுஷ் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து தனுஷ் தரமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் வெளியாகி சூப்பர் டுப்பர் ஹிட் ஆகியுள்ளது.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் நிலையில் அந்த படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது இது ரசிகர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தனுஷ் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணைந்து உருவாக்கிய வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் கடந்த சில காலங்களாக இந்த நிறுவனம் புதிய திரைப்படங்களை தயாரிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த நிறுவனத்தின் அடுத்த படத்தினை மாறி செல்வராஜ் இயக்க இருக்கும் நிலையில் இது குறித்த தகவலை தனுஷ் தன்னுடைய சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த படத்தினை வொண்டர்பார் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ சவுத் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாராக உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhanush
dhanush

இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தினை இயக்கி முடித்திருக்கும் நிலையில் இதனை அடுத்து வாழை என்ற திரைப்படத்தின் இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மேலும் துரு விக்ரம் நடித்து வரும் கபடி மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படத்தினை அடுத்ததாக இயக்க இருக்கிறார் எனக் கூறப்படும் நிலையில் தற்பொழுது திடீரென வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் படத்தினை தயாரிக்க உள்ளார் ‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.