தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்களின் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றன அந்தவகையில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய சிறப்பான படங்களை கொடுத்து மக்களை மத்தியில் பேசும் பொருளாக மாறி அவர் இயக்குனர் ராம்குமார். இவர் அடுத்ததாக பல்வேறு கதைகளை உருவாக்கி இருந்தார்.
அதில் முதலாவதாக சத்யஜோதி பிலிம்ஸ் உடன் கை கோர்த்து ஒரு படத்தை இயக்கி இருந்தார் அந்த படத்தில் தனுஷ் நடிக்க சம்மதித்து இருந்தார் ஆனால் தனுசுக்கு தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன அந்த வகையில் தனுஷ் தற்போது மாறன் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இது முடித்த கையோடு அடுத்ததாக அவரது அண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே ஒருவன் திரைப்படத்தில் நடிக்கிறார் அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தமிழில் மட்டும் இத்தனை படங்கள் இருக்கின்றன இது போதாத குறைக்கு ஹிந்தியிலும் இவர் நடித்த அத்ரங்கி ரே படம் டிசம்பர் 24ஆம் தேதி OTT தளத்தில் வெளியாக இருக்கிறது இது இப்படியிருக்க தெலுங்கில் சேகர் கம்முலா உடன் இணைந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்.
இப்படி அவரது திரைப் பயணம் நீண்டுகொண்டே போவதால் தற்போது ராம்குமார் ஹீரோவை மாற்ற ரெடியாக இருந்தாராம் இருப்பினும் மீண்டும் தனுஷூடன் கதை சொல்லும் பொழுது அந்த கதை தனுஷுக்கு பிடிக்கவில்லை என சொல்லிவட்டாராம் இதனையடுத்து உடனடியாக ராம்குமார் வேறு ஒரு நடிகருக்கு கதை சொல்லியுள்ளார்.
அந்த நடிகர் வேறு யாருமல்ல நடிகர் சிவகார்த்திகேயன் தான். ராம்குமார் கதை சொன்ன விதம் சிவகார்த்திகேயனுக்கு தற்போது பிடித்துள்ளதால் ஓகே சொல்லி உள்ளார் ஆனால் இறுதிகட்ட பேச்சுவார்த்தை முழுமையாக நடந்து முடிந்த பின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.