தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது புரமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் மருதநாயகம் கெட்டப்பில் தனுஷ் கலந்து கொண்டார் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் 2022 ஆம் ஆண்டு மாறான், த கிரேமன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வெளியானது இந்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றாலும் இதற்கு முன்பு வந்த திரைப்படங்களின் அளவிற்கு பெரும் வரவேற்பு பெறவில்லை இருந்தாலும் திருச்சிற்றம்பலம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக தனுஷ் தற்பொழுது வெங்கி அட்லூரி என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷ் டோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். அதேபோல் வாத்தி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் சம்யுக்தா தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் கருணாசின் மகன் கென் கருணாஸ், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி தயாரித்துள்ளார் அதேபோல் வத்தி திரைப்படத்தில் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்துள்ளார். தமிழ்ழில் வாத்தி என்ற திரைப்படத்தின் பெயரிலும் தெலுங்கில் சார் என்ற பெயரிலும் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகி உள்ள வாத்தி திரைப்படத்தின் பாடல் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் வாத்தி திரைப்படம் நாளை பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது அதனால் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக தனுஷ் ஹைதராபாத்தில் கலந்து கொண்டார்.
மேலும் வாத்தி திரைப்படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது இதற்கு முன் இந்த நிறுவனம் வாரிசு திரைப்படத்தையும் ரிலீஸ் செய்தது. இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் வாத்தி பட குழுவினர் பலரும் கலந்து கொண்டார்கள். இதற்கு முன் சென்னையில் நடைபெற்ற வாத்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பாரதிராஜா வயதில் சிறியவர்களாக இருக்கிறார்கள் இல்லை என்றால் தனுஷ் ஜீவி காலில் விழுவேன் ஜிவி பிரகாஷ் கடவுளின் குழந்தை தனுஷ் சிறந்த கலைஞர் நல்ல மனிதன் சம்யுக்தாவை பார்க்கும் போதெல்லாம் காதலிக்க தோன்றுகிறது எப்பொழுதும் சம்யுக்தாவை பார்க்கும் பொழுதும் காலம் மாறி தப்பி பிறந்து விட்டோனோ என்று தோன்றுகிறது அவரை காதலிக்காமல் இருக்கவில்லை இருந்தாலும் சம்யுக்தாவை காதலிக்கிறேன் என்றார்.