உச்சத்தில் இருக்கும் தனுஷ் மார்க்கெட்டை காலி செய்ய நினைக்கும் நடிகர்.! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யலாமா..

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை சென்று அசத்தியுள்ளார். மேலும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆகிறார் நடிகர் தனுஷ்.

இந்நிலையில்  இடையில் பல தோல்வியை கண்டு வந்த தனுஷ் இயக்குனர் மித்திரன் ஜவகர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் குறைந்து வந்த தனுசுக்கு மீண்டும் மார்க்கெட்டை உயர்த்தியது.

இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் இந்த மாதம் 29ஆம் தேதி வெளியாகியுள்ளது. செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைக்க உள்ளார் மேலும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. கேப்டன் மிலர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் கேப்டன் மிலர் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையிலேயே இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல OTT நிறுவனம் 38 கோடி கொடுத்து வாங்கி உள்ளது. மேலும் அதே நிறுவனம் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை 34 கோடிக்கு கொடுத்து வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனுசை விட மார்க்கெட் உயர்ந்த இடத்தில் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார் இதனால் இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று மோத உள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு உள்ளது என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.