பொதுவாக சினிமாவில் வளர வேண்டுமென்றால் திறமை இருந்தால் போதும் என பலரும் கூறி வந்தார்கள் ஆனால் திறமையுடன் அதிர்ஷ்டமும் தேவை என கூறிவருகிறார்கள் தற்பொழுது. ஒரு சிலருக்கு நல்ல திறமை இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காது ஆனால் அதுவே ஒரு சிலருக்கு திறமை இல்லை என்றாலும் அதிர்ஷ்டம் அடிக்கும் அப்படி தான் பல நட்சத்திரங்கள் இன்றைய சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார்கள்.
அதேபோல் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் தன்னுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்தி சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறார்கள். அதேபோல் பல சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் முன்னணி இடத்தில் இருந்து காணாமல் போனவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.
அந்தவகையில் 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை இந்த திரைப்படத்தில் பள்ளி பருவகால காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த திரைப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தார் அதேபோல் தனுஷிற்கு இது மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ், ஷெரின், அபிநய் என பலர் நடித்திருந்தார்கள் ஆனால் அனைவருக்கும் புதுமுகங்கள் தான் அதுமட்டுமில்லாமல் ரமேஷ் கண்ணா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தார்கள் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தவர் அபினய்.
இந்த நிலையில் ஷனுஷ் இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இரண்டாம் கட்ட கதாநாயகனான அபிநய் என்பவருக்கும் நல்ல பெயரும் புகழும் கிடைத்தது. இந்த திரைப்படத்தில் அபிநய் பணக்கார வீட்டு பையன் போல் நடித்து வந்ததால் இவரை பணக்கார பையனாகவே பலரும் பார்ப்பார்கள். மேலும் துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்குப் பிறகு தனுஷூக்கு பட வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ ஆனால் அபிநய் அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு பிறகு இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார் ஆனால் அவருக்கு இந்த இரண்டு திரைப்படமும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. பொதுவாக தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற முத்திரையை அடைந்தவர்கள் ஆக்சன் படங்களில் நடிப்பது மிகவும் கடினம். அப்படி நடித்தாலும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அப்படித்தான் இந்த இரண்டு திரைப்படமும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட 8 திரைப்படங்களும் கைவிடப்பட்டது அதன் பிறகு சினிமாவில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தார் பிறகு சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் பின்பு தன்னுடைய அம்மாவும் இறந்து போனதால் வறுமையின் கோரப் பிடியில் சிக்கினார்.
என்ன செய்வது என்று தெரியாமல் அம்மா இறந்த பிறகு வறுமையின் காரணமாக அம்மா உணவகத்தில் சாப்பிட்டு காலத்தை ஓட்டி வந்தார் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கண்ணீருடன் கூறினார் இதனை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கா இப்படி ஒரு நிலைமை என சோகக் கடலில் மூழ்கினார்கள்.