கதை கூட கேட்காமல் பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் கமிட்டான நடிகர் தனுஷ்..! இவர் மேல இவ்ளோ நம்பிக்கையா..?

dhanush-2
dhanush-2

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் சமீபத்தில் நானே வருவேன் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவ்வாறு இந்த திரைபடம் மட்டுமின்றி தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்து வந்த கொண்டிருக்கிறாராம் இந்நிலையில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை மித்ரன் அவர்கள் இயக்கி வருவது மட்டுமல்லாமல் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்களாம்.

அதுமட்டுமில்லாமல் வெகு நாட்கள் கழித்து நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவருமே இத்திரைப்படத்தில் இணைய உள்ளார்கள். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் மற்றொரு திரைப்படத்திலும் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்க உள்ளதாக கூறபடுகிறது இயக்குனர் சுந்தர் சி ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம்  மற்றும் கமலஹாசனை வைத்து அன்பே சிவம் போன்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் இயக்கிய அரண்மனை திரைப்படத்தின் மூன்றாம் பாகம் கூட வருகின்ற ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகப் போவதாக செய்திகள் வெளியாகியது மட்டுமில்லாமல் சுந்தர் சி தனுஷை வைத்து இயக்கப் போகும் திரைப்படத்தின் கதையை முழுமையாக தனுஷிடம் கூறவில்லையாம்.

பொதுவாக எந்த ஒரு நடிகராக இருந்தாலும் இயக்குனரிடம் முழுக்கதையும் கேட்டுவிட்டு அதன் பின்னர்தான் சம்மதம் தெரிவிப்பார்கள் ஆனால் நடிகர் தனுஷ் சுந்தர் சி மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக அதை சரியாக கேட்காமல் கூட ஓகே சொல்லிவிட்டாராம்.

sundhar c-1
sundhar c-1