சினிமா உலகில் பயணிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் வெற்றிக்காக தொடர்ந்து படங்களில் ரொம்பவும் மெனக்கெட்டு நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு வெற்றி படங்களை கொடுத்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து நித்தியா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி சுமார் 80 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சூப்பராக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி, நானே வருவேன், போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.
இந்த படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அவரது சம்பளம் குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்திற்காக சுமார் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் கசிந்த நிலையில் தற்போது தனது சம்பளத்தை இவர் உயர்த்தி உள்ளார்.
திருச்சிற்றம்பலம் படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததை அடுத்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்காக தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளார் என சொல்லப்படுகிறது. தனுஷ் 30 கோடி கேட்பதால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் இருக்கிறதாம். தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அதனால்தான் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை எனவும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது. சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் வெற்றி பெற்றவுடன் தனது சம்பளத்தை உயர்த்துவார்கள் அந்த வகையில் தனுஷ் தற்போது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.