சினிமா உலகில் ஒரு சில நட்சத்திரங்கள் சேரும் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆட்டோமேட்டிக்காக அதிகரிக்கும் அந்த வகையில் செல்வராகவனும், தனுஷும் கைகோர்த்து பணியாற்றிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் இவர்கள் இதுவரை நான்கு முறை இணைந்துள்ளனர் ஐந்தாவது முறையாக நானே வருவேன் படத்தின் மூலம் இணைந்தனர்.
நானே வருவேன் படத்தை மிகப் பிரமாண்டமான பொருட் செலவில் கலைபுலி தாணு அவர்கள் தயாரித்தார் இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இந்த படத்தைப் பற்றி பெருமையாக பேசி வந்தார் மேலும் படத்தின் பிரமோஷன் போதும் சரி இந்த படத்தை பற்றியும், தனுஷ் பற்றியும் அதிகம் பேசி வந்தார் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.
ஆனால் படம் வெளிவந்து தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் பொதுவான ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இந்த படம் ஓட ஆரம்பித்தது முதல் நாளில் நல்ல வசூலை அள்ளி நாளும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அல்ல.. தவறியது அதற்கு காரணம் அடுத்த நாளே பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆனது தான்…
பொன்னியின் செல்வன் படம் நல்ல விமர்சனத்தை பெற்றதன் காரணமாக நானே வருவேன் படத்தின் வசூல் பாதித்தது. கடந்த சில தினங்களாக நானே வருவேன் படத்தின் வசூல் சிறப்பாக இல்லாமல் போனது இருப்பினும் ஓரளவு டீசண்ட் ஆனா வசூலை அள்ளி வருகிறது நானே வருவேன் திரைப்படம் வெளியாகி இத்துடன் 6 நாட்கள் முடிந்துள்ளது.
இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் நானே வருவேன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 6 நாள் முடிவில் சுமார் 30 கோடி வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.