பல விமர்சனங்களுக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் உருவ கேளி செய்யப்பட்டு பிறகு தனது சிறந்த நடிப்பு திறமையினால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் இந்திய நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்,இயக்குனர்,எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை, எழுத்தாளர் மற்றும் பின்னணி பாடகர் என அனைத்து பன்முகத் திறமைகளையும் கொண்டுள்ளார்.தற்பொழுது நடிகர் தனுஷ் தமிழை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலங்களாக ஹோலிவூட்டிலும் நடித்து அசத்தி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் தி கிரே மேன் என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது மேலும் தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் தனுஷ் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நிலையில் அவரைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதாவது தனுஷ் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது தற்பொழுது மிகப்பெரிய ஒரு பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது அது என்னவென்றால் நடிகர் தனுஷ் ரஜினி வீட்டிற்கு அருகில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட ஆரம்பித்து வருவதாக சில நாட்களாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த இடத்தை கிட்டத்தட்ட 30 கோடி கொடுத்து வாங்கி 150 கோடிக்கு மேல் செலவு செய்து பிரம்மாண்டமாக வீடு கட்ட திட்டமிட்டு உள்ளார். அந்த வீட்டினை தனுஷ் ரஜினியை மட்டும் நம்பி கட்ட முடிவெடுத்துள்ளாராம் இந்த வீட்டை ஆடம்பரமாக உருவாக்கவும் இந்த வீட்டின் செலவு கொஞ்சம் முன்ன பின்ன இருப்பதால் மாமனார் பார்த்துக் கொள்வார் என்ற தைரியத்தில் தான் இவர் வீடு கட்ட ஆரம்பித்தார்.
ஆனால் தற்பொழுது அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதால் அவரால் ரஜினியிடம் எந்த உதவியும் கேட்க முடியாமல் இருந்து வருகிறது இதன் காரணமாக வீடு கட்ட ஆரம்பித்து உள்ள நிலையில் அனைத்து வேலைகளும் அப்படியே நிற்கின்றது இவ்வாறு மனைவியின் ஆசைக்காக மாமனாரை நம்பி தான் தனுஷ் இந்த முயற்சியில் இறங்கினார் ஆனால் தற்பொழுது விவாகரத்து முடிவு எடுத்த காரணத்தினால் மாமனாரிடம் எந்த உதவியும் கேட்க முடியவில்லை என தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.