நடிகர் தனுஷ் சினிமாவுலகில் தான் வெற்றி பெற்றால் மட்டும் போதாது உடனிருக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் சினிமா உலகில் வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அந்த வகையில் தான் பல நடிகர் நடிகைகளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்து அவர்களை தூக்கி விட்டார்கள்.
அப்படி சொல்லவேண்டுமென்றால் ஆண்மையில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் படத்தில் மாளவிகா மோகனன். ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தவர் தனுஷ் தான் என கூறப்படுகிறது அந்த அளவிற்கு நல்ல உள்ளம் கொண்டவர். அதேபோல் தான் தனுஷ் நடிப்பில் உருவான 3 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அப்பொழுது உனக்கு காமெடி வருகிறது.
நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் நீ ஹீரோவாக வருவார் என கூறினார் அதற்கு ஏற்றார்போல உண்மையாலுமே வெற்றிமாறனின் உதவி இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனை அமர்த்தி அழகு பார்த்தார். படத்தை தனுஷ் தான் தயாரித்திருந்தார். படம் சிறப்பாக வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது அதேசமயம் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் தனுஷ் இந்த படத்தில் பாடலில் நடனமாடி இருப்பார்.
அது அந்த படத்தின் வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது இப்படி சிவகார்த்திகேயனை வளர்த்து ஆளாக்கி தனுஷ் தான் ஆனால் இப்போது இருவரும் இணையாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து உள்ளது ஒரு சிலர் பல காரணங்களை கூறுகின்றனர் இப்படி நிலையில் பிரபல பிஸ்மி அவர்கள் பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன், தனுஷ் இணையாதது குறித்து பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது : முதலில் அனிருத் தனுஷ் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார் அதன் காரணமாக சில பிரச்சனைகள் வந்தது. அதனால் சிவகார்த்திகேயனும், தனுஷும் பிறகு இணையே இல்லை என கூறி உள்ளார். தனுஷ் இல்லை என்றால் சிவகார்த்திகேயன் இல்லை என்பது உண்மைதான் ஆனால் ஒரு பிரச்சினையை வளர்த்துக்கொண்டு போது விட இருவரும் இணைந்து படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.