தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வளம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையில் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் தனுஷின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் உயர்ந்துவிட்டது.
இது ஒரு பக்கம் இருக்க இதற்கு முன்பாக வட சென்னை என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்கியது மட்டும் இல்லாமல் இதில் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்கள் நடித்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வடசென்னை பாஷையில் பேசியது பலரையும் மிரள வைத்தது. அதுமட்டுமில்லாமல் மேடையில் பேசிய பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்தடுத்த திரைப்படங்களில் என்னுடன் நடிக்க மாட்டாராம் ஏனென்றால் அவருக்கு வேறு ஒரு நடிகையுடன் தான் நடிக்க வேண்டும் என ஆசை எனக்கூறி பல்வேறு சர்ச்சையை கிளப்பி விட்டார்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் இந்நிலையில் இந்த பிரிவிற்கு காரணம் நடிகர் தனுஷ் அவர்கள் நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவது தான் காரணம் என அவர் ஒரு நடிகையுடன் நெருக்கமாக பழகுவது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காததாக கூறிய நிலையில் அவர் அதை மீறியும் அந்த நடிகையிடம் நெருக்கம் காட்டியது தான் இவர்களுடைய பிரிவிற்கு காரணம் என கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் மேடையில் பேசும் பொழுது அமலா பாலுடன் நடிக்க தான் தனுசுக்கு ஆசை என கூறியுள்ளார். அதேபோல அடுத்ததாக நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை என ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாக கூறியிருந்தார்.
ஏற்கனவே தனுஷ் அவர்கள் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் அமலாபாலுடன் மிகவும் நெருக்கம் காட்டியது பல்வேறு பிரச்சனையை உருவாக்கியது இன் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் எறிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றியது போல சில வார்த்தைகளை விட்டது. பலருக்கும் அதிற்ச்சியை உண்டாக்கி உள்ளது.