படத்தை பார்த்து விட்டு செல்வராகவன்னிடன் சண்டை போட்ட தனுஷ்.? இனி உன் சிவகாசமே வேண்டாம் தெரிந்து ஓடும் தம்பி.

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். அண்மைக்காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார். தற்பொழுது கூட வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் என பல சூப்பரான படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளதால் தனுஷின் சினிமா மார்க்கெட் உயரும் என தெரிய வருகிறது.

சினிமாவில் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் நிஜ வாழ்க்கையில் தற்போது சிக்கி சின்னாபின்னம் ஆகிறார். நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர் 12 வருடங்களுக்கு மேலாக சூப்பராக வாழ்ந்து வந்தார்கள் திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்தனர்.

இதன் பிறகு நடிகர் தனுஷுக்கு சினிமாவிலும் சில பிரச்சனைகள் எழுந்தன இருப்பினும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் வந்தார். அந்த வகையில் செல்வராகவனுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் செல்வராகவன் இந்த படத்தை இலக்கியம் வருகிறார் மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்தும் உள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது தான் ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது தனுஷுக்கும் செல்வராகவனுக்கும் இடையே தொடர்ந்து சில வார்த்தை போர் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மோதலால் இவர்களது சண்டை உச்சகட்டத்தை அடைந்துள்ளது. படத்தின் அவுட்புட்டை தனுஷ் பார்த்தபொழுது நான் எதிர்பார்த்தது போன்று படம் இல்லை நான் சொன்னது போன்று படத்தை எடுக்கவில்லை.

இப்படி சொதப்பி விட்டாய் என அண்ணன் செல்வராகவனிடம் கோபத்துடன் பேசி உள்ளதாக கூறப்படுகிறது இது மக்களுக்கு பிடிக்கும் படம் எதிர்பார்ப்பதை விட அருமையாக வந்துள்ளது என செல்வராகவன் பதில் அளித்துள்ளாராம். படம் வெளிவர வேண்டிய சமயத்தில் இப்படி சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள் என படத்தின் தயாரிப்பாளர் தானு கூறியுள்ளார் உங்கள் சண்டையை அப்புறம் வைத்துக் கொள்ளுங்கள் முதலில் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளை பாருங்கள் என கூறியுள்ளாராம். இந்தப் படத்திற்கு பிறகு தனுஷ்  அண்ணன் செல்வராகவன்னுடன் இணைவது சற்று கேள்வி குறிதான் என கூறப்படுகிறது.