சிம்புவிடம் சினிமாவில் மட்டுமல்லாமல் ஜிம் ஒர்க் அவுட்டில் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ்.! அட இந்த லிஸ்ட்ல எப்படி ஜிவிபிரகஷ் வேறயா.!

dhanush-simbu
dhanush-simbu

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார், தனுஷ் நடித்த பல திரைப்படங்களுக்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக வெற்றிமாறன் இயக்கும் தனுஷ் திரைப்படத்திற்கு கண்டிப்பாக ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அந்த வகையில் ஆடுகளம் பொல்லாதவன் வடச்சென்னை என அனைத்து திரைப்படத்திற்கும் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தனுஷின் வெற்றி திரைப்படங்களுக்கு ஜீவி பிரகாஷ் இசை அமைத்துள்ளது அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது, கடைசியாக தனுஷின் அசுரன் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசை அமைத்து அசத்தினார், அதிலும் பின்னணி இசை வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தனுஷுடன் சினிமாவில் மட்டும் இணையாமல் உடற்பயிற்சி செய்வதிலும் இணைந்துள்ளார், இதுகுறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தனுஷுடன் இணைந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தனுஷின் அடுத்த திரைப்படமான 43வது திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு சிம்பு  தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார், தற்போது அவருக்கு போட்டியாக தனுஷ் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சினிமாவில் மட்டும் சிம்புவுடன் போட்டியில்லாமல் வெளி உலகத்திலும்  சிம்புவுடன் போட்டி போடுகிறார் என்பது ஆணித்தனமாக தெரிகிறது.

dhanush-gvp
dhanush-gvp