தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து பிறகு தற்பொழுது பாலிவுட், ஹாலிவுட் என உலகில் உள்ள பல மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் பன்முகத் தன்மைகளைக் கொண்டவராக திகழ்கிறார். மேலும் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வெற்றியை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த காரணத்தினால் வெற்றி திரைப்படங்களை தர வேண்டும் என்ற ஒரு கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜகவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
மேலும் பல வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணிகளில் இந்த திரைப்படம் உருவானது. சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. இந்நிலையில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் மித்ரன் பற்றி பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
அதாவது ஒரு நேர்காணலின் பொழுது நடிகர் விவேக் இயக்குனர் மித்ரன் நல்ல திறமையான இயக்குனர் அவர் நிறைய படங்களை இயக்க வேண்டும் தனுஷ் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இந்த நேர்காணலில் விவேக் என கூறுவுள்ளார். இவ்வாறு விவேக் சொன்னதை போல் தற்பொழுது தனுஷ் நிறைவேற்றி உள்ளார என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.