நடிகர் தனுஷ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார் இவர் சினிமா உலகில் எப்படி வெற்றியை கண்டாரோ அதேபோல நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றன. நிஜ வாழ்க்கையில் சூப்பராக வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள் இருவரும் 18 வருடங்கள் கழித்து சில பிரச்சனைகள் காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்க்க வேண்டுமென ரசிகர்களும், மக்களும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
அதேசமயம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குடும்பம் இருவரையும் சேர்த்து வைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி தான் வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக தொகுப்பாளர் நீங்கள் படிக்கும் பொழுது நன்றாக படிப்பீர்களா..
அல்லது சுமாராக படிப்பீர்களா என கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் நான் பத்தாம் வகுப்பு வரை தான் நன்றாக படித்ததாகவும் 11ஆம் வகுப்பு படித்த போது காதலில் விழுந்ததால் படிப்பை கோட்டைப்பட்டதாகவும் தெரிவித்தார் மேலும் அந்த பெண்னுடன் எந்த நேரமும் போன் பேசுவேன் என் முழு கவனமும் அவர் மேல் இருந்ததால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனக் கூறினார்.
லெட்டர் மற்றும் மெயில் மூலமாக பேசுவோம் என்றும், முதல் காதல் என்றுமே ஸ்பெஷல் தான் எனவும் தனுஷ் தெரிவித்திருந்தார். பின் 11ஆம் வகுப்பு படித்த பொழுது துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வந்து பின் படவாய் பெயர் அள்ளி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறினார்.