அரசு பேருந்தை வழிமறித்து அட்ராசிட்டி பண்ணும் தனுஷ் ரசிகர்கள்.! நானே வருவேன் கோல கால கொண்டாட்டம்

naane-varuven

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் மீண்டும் உருவாகி உள்ள திரைப்படம் தான் நானே வருவேன் இதற்கு முன்பு காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது அந்த லிஸ்டில் நானே வருவேன் திரைப்படமும் இடம்பெறும் என மிகுந்த எதிர்பார்ப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

திரில்லரில் மிரட்டி உள்ள நானே வருவேம்  இன்று காலை எட்டு மணிக்காட்சி ஒளிபரப்பப்பட்டது வழக்கமாக தனுஷ் திரைப்படத்திற்கு நாலு மணி காட்சிகள் உண்டு ஆனால்  கடைசியாக வெளியாகிய இரண்டு திரைப்படங்களுக்கும் காலை 8 மணி காட்சிகள் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இதற்கு முன்பு வெளியாகிய திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களுடன் நல்ல விமர்சனங்களை பெற்றது இந்த திரைப்படம் எட்டு மணி காட்சியில் தான் ஒளிபரப்பப்பட்டது.

திருச்சிற்றம்பலம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து  நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் நானே வருவேன் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் மணிரத்தினத்தின் பிரம்மாண்ட படைப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக இந்த திரைப்படம் களமிறங்கியுள்ளது.

இன்று 700 திரையரங்கிற்கு மேல் ஒளிபரப்பப்பட்டுள்ளது நானே வருவேன் ஆனால் நாளைக்கு பொன்னியின் செல்வன் வெளி வருவதால் 200 திரையரங்குகள் குறைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. நானே வருவேன் திரைப்படத்தை கலைபுலி எஸ் தானு தான் தயாரித்து உள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு எதிராக இந்த திரைப்படம் வெளியானதால் மிகப்பெரிய எதிர்ப்பு நிலவியது ஆனால் படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தானம் ஒன்பது நாட்கள் விடுமுறை வருவதால் கண்டிப்பாக இதனை நான் மிஸ் செய்ய மாட்டேன் என கூறி முடித்துக் கொண்டார்.

நானே வருவேன் திரைப்படத்தின் முதல் காட்சி எட்டு மணிக்கு தலையிடப்பட்டது இதனை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு கடல் அலை போல் திரண்டு வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் பிரம்மாண்ட கட் அவுட் பால் அபிஷேகம் பட்டாசு என அமர்க்கள படுத்தினார்கள்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தனுஷ் ரசிகர்கள் ஒவ்வொரு திரையரங்கையும் தெறிக்க விட்டு வருகிறார்கள் அனைவரும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் இல்லை என்றாலும் ஆனால் தனுசு ரசிகர்கள் கொண்டாட்டத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள் இந்த நிலையில் மதுரையை சேர்ந்த தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொழுது அரசு பேருந்துகளை வழிமறைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடுரோட்டில் வந்த அரசு பேருந்தை வழி மறித்ததால் பயணிகள் அவஸ்தை பட்டாள்கள் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகப்பெரிய வைரல் ஆகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இது போல் சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.