தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படம் கோலாகலமாக வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதையை தேர்ந்தெடுத்தால் மக்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை வேற லெவெலில் எதிர்நோக்கியிருந்தனர் அதை சரியாக பூர்த்தி செய்து தற்போது வசூல் வேட்டையும் பெரிய அளவில் நடைபெறுகிறது.
குடும்பங்களை பெரிய அளவு கவர்ந்தாலும், ரசிகர்களை கவரவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது மேலும் ஓரளவு கலவையான விமர்சனத்தை இந்த திரைப்பட பெற்றுள்ளதாக கூறப்படுகிறது அஜித் படங்களின் சாயல் இந்த திரைப்படத்தில் காணப்பட்டது தான் காரணமா என்று தெரியவில்லை.
எப்படியும் ரஜினி படங்கள் நீண்ட நாட்கள் ஓடி விடும் அதற்கு காரணம் அவரது ரசிகர்கள் என கருதப்படுகிறது. மேலும் கோடான கோடி ரசிகர்கள் இருப்பதால் இந்த திரைப்படத்தின் வசூல் வேட்டை மிகப்பெரிய அளவில் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது அண்ணாத்த திரைப்படம் தமிழகத்தில் முதல்நாள் மட்டுமே 34 கோடிக்கு மேல்அள்ளியது.
உலக அளவில் 70 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியுள்ளது இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சிறப்பான வரவேற்பு பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது அண்ணாத்த. இந்த திரைப்படத்தை தற்போது சினிமா பிரபலங்களும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது குடும்பம் மற்றும் தனது மாமியாரும் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கவின் போன்றோரும் திரையரங்கிற்கு வந்து ரஜினியின் அந்த திரைப்படத்தை விசிலடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.