தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ் இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர்களில் இவரும் ஒருவர்.
இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி அவர்களின் மருமகன் இவர் ரஜினிகாந்த் மகளை திருமணம் செய்து கொண்டார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிகளுக்கு தற்போது யாத்ரா மற்றும் லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.
நல்லபடியாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திடீர் என விவாகரத்து செய்தியை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்கள். இந்த நிலையில் தனுஷ் திடீரென தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என்னுடைய மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது கடந்த 18 வருடங்களாக தயாராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாகவே பயணித்தோம்.
ஆனால் தற்பொழுது நானும் ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். என அவர் கூறியுள்ளார் நடிகர் தனுஷ் திடீரென விவாகரத்து செய்தியை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சினிமா உலகத்தில் ஒட்டுமொத்த நடிகர்களும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இவர்கள் விவாகரத்து செய்வதற்கு என்ன காரணம் என்பது இதுவரை குறிப்பிடப்படவில்லை அதேபோல் ஐஸ்வர்யா அவர்களும் விவாகரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை தைரியமாக இருங்கள் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022