நடிகர் தனுஷ் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலுமே ஒவ்வொரு படத்திற்காகவும் ரொம்ப மெனக்கெட்டு நடித்து வருகிறார். சினிமா உலகில் என்ன தான் பட வாய்ப்பு வந்தாலும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தால் தான் ரசிகர்கள் தன்னை கொண்டாடுவார்கள்..
அதே சமயம் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை நன்கு அறிந்தவர் தனுஷ். அதனால்தான் ஒவ்வொரு கதையையும் ரொம்ப யோசித்து ஆராய்ந்து அந்த கதைக்கு ஓகே சொல்லுவாராம் அதனால் அவர் நடிக்கும் படங்களும் பெரும்பாலும் வெற்றி படங்கள் தான் குறிப்பாக இவர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி.
இப்படி வெற்றியை கண்டு ஓடி கொண்டிருந்த நடிகர் தனுஷுக்கு.. கடைசியாக ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன அதிலிருந்து தற்போது மீள தனுஷ் மித்ரன் ஜவகர் உடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தார். இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படம் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்குகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷை பற்றிய பிரபல இயக்குனரும் நடிகருமான அமீர் புகழ்ந்து பேசி உள்ளார். வடசென்னை படத்தில் 3 விதமாக நடிகர் தனுஷ் நடித்திருப்பார் பள்ளி மாணவனாக ஒரு பாடி லாங்குவேஜிலும் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து ஒரு பாடி லாங்குவேஜிலும்..
பிறகு ஜெயிலுக்கு செல்லும் கதாபாத்திரம் போன்றவற்றையும் கையாண்டிருப்பார் அவருக்குள் அசுரத்தனமான ஒரு நடிகர் இருக்கிறார் என அமீர் புகழாரம் சூட்டி உள்ளார். இதனை தற்போது நடிகர் தனுஷ் ரசிகர்கள் இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.