தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் அவருடைய ஒவ்வொரு படத்திற்காகவும் ரொம்ப கஷ்டப்பட்டு சூப்பராக நடிக்கிறார் அதனாலயே அவரது படங்கள் பெரிதும் வெற்றி படங்களாக இருக்கின்றன.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் நானே வருவேன் போன்ற படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுக்க தனுஷ் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரது கையில் தற்பொழுது கேப்டன் மில்லர் வாத்தி போன்ற படங்கள் இருக்கின்றன.
இதுமட்டும் இல்லாமல் சேகர் கம்முலா உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளி வருகின்றன. இப்படி தனுஷ் ஓடுவதால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கும் தனுஷுக்கு சினிமாவையும் தாண்டி மற்றவற்றிலும் அதிக ஆர்வம் உண்டு அப்படி ஒன்றைதான் நாம் பார்க்க இருக்கிறோம்.
தனுஷுக்கு சொகுசுகார்களை பயன்படுத்துவது ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் தனுஷ் வைத்திருக்கும் கார்கள் என்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம். நடிகர் தனுஷ் வைத்திருக்கும் கார்களிலேயே மிக அதிக விலை உயர்ந்த சொகுசு கார் என்றால் அது ராய்ஸ் கார் தான் இதன் மதிப்பு மட்டுமே 7 கோடி என சொல்லப்படுகிறது.
அடுத்ததாக பேண்டிலி என்னும் சொகுசு காரையும் அவர் பயன்படுத்தி வருகிறார் அதன் மதிப்பு மட்டுமே 3.20 கோடி என சொல்லப்படுகிறது. இது தவிர 1.20 கோடி மதிப்பில் ஆடி கார் ஒன்றையும் இவர் பயன்படுத்தி வருகிறார். திரை உலகில் இருக்கும் நடிகர்களில் அதிக சொகுசு கார்களை பயன்படுத்தக்கூடிய நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.