தனுஷ் தற்போது அடுத் அடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகுவதற்கு ரெடியாக இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது.மேலும் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார்.
மேலும் இந்த படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார் அந்தவகையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.
அதிலும் குறிப்பாக அந்த திரைப்படத்தின் புஜ்ஜி பாடல் ரசிகர்களிடையே தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.
மேலும் ரசிகர்கள் பலரும் இந்த பாடலை பார்த்துவிட்டு தல அஜித்தின் விவேகம் படத்தில் இருந்து காப்பி அடித்து விட்டார்கள் என்று கூறி வருகிறார்கள்.
அதற்கான வீடியோ காணொளியை ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் அந்த பாடல் காப்பியடிக்கப்பட்டது தான் என்று சமூக வலைதள பக்கங்களில் வீடியோ காணொளியை வெளியிட்டு இருக்கிறார் ஒரு ரசிகர்.