பிரமாண்டமான படத்தை எதிர்த்து மோதும் தனுஷின் “நானே வருவேன்”..! வெற்றியை ருசிக்குமா..

dhanush-
dhanush-

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகி இருந்த திருச்சிற்றம்பலம் படம் அண்மையில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில்  தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

படம் வெளிவந்து நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை அள்ளி வருகின்றன. இதனால் தற்போது தனுஷ் திருச்சிற்றம்பலம் பட குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றன. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் வாத்தி, நானே வருவேன் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன்.. திரைப்படத்தை எஸ் கலைப்புலி தானு தயாரித்து வருகிறார் மற்றும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது அதனால் தயாரிப்பாளர் படத்தை கூடிய விரைவில் வெளியிட தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதன் முதல் பாகத்தின் டீசர் மற்றும் போஸ்டர் ஆகியவை வெளியாகி மக்கள் மத்தியில் வைரல் ஆகியது. பொன்னியின் செல்வன் படத்தின் டீசரில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் போன்ற பலரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதனால் இந்த படத்தை மக்கள் பலரும் பெரிய அளவில் எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். லைக்கா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே தேதியில் தற்போது தனுஷின் நானே வருவேன் திரைப்படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.